பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


180


உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறென
நுவலப் படுவன நோயா கும்மே

179
உரை
182

        உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு பிறப்பு பிணி மூப்பு சாவு என - உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் பிறப்பும் பிணியும் மூப்பும் சாக்காடும் என்றும்; அவலம் அரற்று கவலை கையாறு என - அவலமும் அரற்றலும் கவலையும் கையறவும் என்றும்; நுவலப்படுவன - சொல்லப்படும் நிதானங்களே; நோயாகும் - துக்கமாம் எ -று.

       
பிறப்புக்கும் சாக்காட்டிற்கும் இடையே பிணியினும் மூப்பினும் விரவியும் தனித்தும் வந்து துன்புறுத்தலின், அவல முதலிய நான்கினையும் பிரித்துக் கூறினார். பிரித்துக் காட்டும் என வென்னும் இடைச் சொல் எண்ணுப் பொருளில் வந்து பிறாண்டும் சென்றியையுமாறு பிரிந்து நின்றது. நோய் செய்வனவற்றை நோயென்றது உபசாரம். இதனால் துக்கமென்னும் முதல்வாய்மை கூறியவாறு.