பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை





195
அறுவகை வழக்கு மறுவின்று கிளப்பிற்
றொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந் துரை யென்ற நான்கினு மியைந்த
உண்மை வழக்கு மின்மை வழக்கும்

உள்ளது சார்ந்த வுண்மை வழக்கும்
இல்லது சார்ந்த வின்மை வழக்கும்
உள்ளது சார்ந்த வின்மை வழக்கும்
இல்லது சார்ந்த வுண்மை வழக்குமெனச்

191
உரை
198

        மறுவின்று கிளப்பின் - குறைவின்றிக் கூறுமிடத்து; அறுவகை வழக்கு - ஆறுவகைப்பட்ட வழக்காவன; தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும்- தொகையும் தொடர்ச்சியும் தன்மைமிகுத்துரையும் இயைந்துரையும் என்ற நான்கோடும்; இயைந்த - சேர்ந்து வருவனவாகிய; உண்மை வழக்கு...இல்லது சார்ந்த வுண்மை வழக்கும் என - உண்மை வழக்கெனவும், இன்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வுண்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வுண்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வின்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வின்மை வழக்கெனவுமாம் எ - று

       
எனவென்பது எங்குஞ் சென்றியைந்தது. ஆம் என்பது வருவிக்கப் பட்டது. தொகை முதலியன இயைந்த வழக்காவது தொகையுண்மை வழக்கு தொகையின்மை வழக்கு என்றாற் போல வருவது. இவ்வாறே பிறவும் ஒட்டிக் கொள்க. இவ்வகையால் வழக்கு இருபத்து நான்காமாயினும், ஈண்டு ஆசிரியர் சுருக்கம் வேண்டித் தொகை முதலிய நான்கையும் தனிப்படக் கூறி, அவற்றின் பின் அறுவகை வழக்கினையும் பொதுப்படக் கூறுகின்றார். சுருங்கக் கூறுமிடத்தும் இன்றியமையாது வேண்டப்படுவனவற்றை யெஞ்சாமற் கூற வேண்டுவது பற்றி, "மறுவறக் கிளப்பின்" என்றார்.