மலர்வனம் புக்க காதை

       



70
அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின மூசா தொல்யாண்டு கழியினும்
மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்
கடம்பூண் டோர்தெய்வங் கருத்திடை வைத்தோர்
ஆங்கவ ரடிக்கிடின் அவரடி தானுறும்
நீங்கா தியாங்கணும் நினைப்பில ராயிடின்


67
உரை
72

       ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும்-அப்பீடத்தில் இட்டால் அரும்புகள் மலரா நிற்கும், அலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா தொல் யாண்டு கழியினும்-அலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடமாட்டா, அவற்றின்கண் வண்டினங்களும் மொய்க்கா, மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் - மாதவி அதன் இயல்பு ஒன்றினை நன்கு மறந்தேன் இப்பொழுது அதனைக் கேட்பாயாக, கடம்பூண்டு-காணிக்கை செலுத்தலை மேற்கொண்டு, ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் - ஒரு தெய்வத்தை மனத்திலே வைத்து, ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்-அப்பீடத்தின்கண் அவரடியின் பொருட்டு மலரை இட்டால் அம்மலர் அத்தெய்வத்தினடியைச் சென்று சேறும்; நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின் - நினைப்பொன்றுமின்றி இட்டால் அம்மலர் யாண்டும் சொல்லாது அவண் தங்கும் ;

       தொல் யாண்டு-பல் யாண்டு ; கழிந்த ஆண்டுகள் தொன்மையவாதலின் தொல் யாண்டு', என்றார் - தொல்யாண்டு கழியினும் வாடா மூசா வென்க. மறந்தேன் என்றது உலக வழக்குப்பற்றி. கடம் - கடன் ; காணிக்கை. வைத்தோர் ; முற்றெச்சம். மலரை இடின் என்க.