மலர்வனம் புக்க காதை

       




150
விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி
அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள்


146
உரை
150

       விராடன் பேரூர் விசயனாம் பேடியைக காணிய சூழந்த கம்பலை மாக்களின்-விராடனது பெரிய நகரத்தின்கண் அருச்சுனனாகிய பேடியைக் காணுமாறு சூழ்ந்த முழக்கத்தினை யுடைய
மக்களைப்போல, மணிமேகலைதனை வந்து புறம் சுற்றி-வந்து மணி மேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து, அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் - எழிலமைந்த நல்லுருவத்தினை அரிய தவநெறியிற் படுத்திய தாயோ கொடியவளும் தகுதியில்லாதவளுமாவள் ;

       பாண்டவர் ஐவரும் பாஞ்சாலியும் விராடனது நகரத்திற் கரந்துறைந்தகாலை அருச்சுனன் பேடியுருக் கொண்டு பிருகந்தளை என்னும் பெயருடன் ஆண்டிருந்தமை பாரதத்தால் அறியலாவது. கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு முழங்கித் திரியுமவர். அணி அமை தோற்றத்து - அணிகள் இல்லாத தோற்றத்துடன் என்றுமாம். சீவக சிந்தாமணியில் 1"உப்பமை காமத்துப்பின்" "நிகரமைந்த முழந்தாளும்" என்னுமிடங்களில் 'அமை' எனபதற்கு இப்பொருள் கூறப்படுதல் காண்க..

1 சீவக. 107 ; 175.