மலர்வனம் புக்க காதை

       


20




25
குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டுத்
தணியாத் துன்பந் தலைத்தலை எய்தும்
மணிமே கலைதன் மதிமுகந் தன்னுள்
அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய
கடைமணி யுகுநீர் கண்டன னாயிற்
படையிட்டு நடுங்குங் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலு முண்டோ
பேடிய ரன்றொ பெற்றியின் நின்றிடின்


18
உரை
25

      குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு-தாய் தந்தையர்க்கு நேர்ந்த கொடிய துன்பத்தினைக் கேட்டு, தணியாத் துன்பம் தலைத் தலை எய்தும்-ஆறாத் துயரினை மேன்மேல் அடையும், மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்-மணிமேகலையினது மதிபோலும் முகத்தினுள், அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய-அழகு விளங்குகின்ற மெல்லிய நீலமலரை வென்ற, கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் -கண்ணினது கருமணியின் கடையினின்று சிந்துகின்ற நீரைக் கண்டனனாயின், படைஇட்டு நடுங்கும் காமன்-காமன் தன் படையினை எறிந்து நடுங்குவன், பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ - பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ?, பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் - அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல் அவர்தாம் பேடியர் அல்லரோ ;
      ஆய்-ஆராய்ந்தெடுத்த என்றுமாம். 1"ஆவின் கடைமணி யுகுநீர்" என்பது ஈண்டு அறியற்பாலது. அவளாற்பகை வெல்லக் கருதியிருந்த காமன் இனி வெல்லுதலரிதென்று படையை ஏறிந்து நடுங்குவா னென்க. உண்டோ, ஓ ; எதிர்மறை. பெற்றி - இயல்பு. பெற்றியில் நிற்றலாவது - இவளை விரும்பாது நிற்றல். ஆடவர் என்றது ஈண்டு இன்பத்துறை நிற்பாரைக் கருதிற்று. பேடியர் - பெண்ணின்பம் துய்க்குந் தகுதியில்லாதவர்.

சிலப், 20 : 54.