மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       

55
மையறு படிவத்து மாதவர் புத்தெமைக்
கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம்
அறவோ ருளிரோ ஆருமி லோமெனப்
புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற

53
உரை
57

       இவண் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க் கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தையுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம் பொடு சாற்ற - புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற ;
       

       இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம் ; அல்ல என் பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும் ; உம்மை : எச்சம் ; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம். ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர்.