மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       
80 அஞ்சொ லாழியை நின்திற மறிந்தேன்
வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியாற் சேர்தலு முண்டென்
றப்பொழி லாங்கவன் அயர்ந்து போயபின

80
உரை
83

       அஞ்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய மொழியையுடைய ஆயிழாய் நின் வரலாற்றினை அறிந்தேன், வஞ்சிநுண் இடை மணிமேகலைதனை - கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலையை. சித்திராபதியால் சேர்தலும் உண் டென்று-சித்திராபதியால் அடைதலுங்கூடும் என்று கூறி, அப் பொழில் ஆங்கவன் அயர்ந்து போயபின் - உதயகுமரன் அப்
பொழிலினின்றும் காமத்தால் தளர்ச்சியுடையனாய்ச் சென்ற பின்னர்;