மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       

95
இந்திர கோடணை விழாவணி விரும்பி
வந்து காண்குறுஉ மணிமேகலா தெய்வம்
பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி
மணியறைப் பீடிகை வலங்கொண் டோங்கிப்


94
உரை
97

       இந்திர கோடணை விழாஅணி விரும்பி வந்துகாண்குறூஉம் மணிமேகலாதெய்வம் - இந்திரகோடணையாகிய விழாவின் எழிலைக் காணுதற்கு விரும்பி வந்த மணிமேகலா தெய்வம், பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி அப்பதியின்கணிருக்கிற ஒரு பெண் வடிவத்துடன், மணியறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி - பளிக்கறையிலுள்ள பீடிகையை வலம்வந்து விசும்பில் உயர்ந்து;        
       
       கோடணை - முழக்கம்; பலவகை ஆரவாரங்களை யுடைமையின், இந்திர விழா-இந்திர கோடணை யெனப்பட்டது. "இந்திர கோடணை யிந்நகர்க் காண," "இந்திர கோடணை விழவணி வருநாள்" (7. 17, 17; 59) எனப் பின் வருதல் காண்க. மணி-பளிங்கு,