மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       

120

குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும்
குடதிசை மருங்கிற் கென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும

119
உரை
122

       குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்-கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும், குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்-மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும், வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடாக-வெள்ளியாலாகிய வெண் தோட்டுடன் பொன்னாலாய தோடுமாக, எள்ளறு திருமுகம் பொலிப் பெய்தலும்-இதழ்தலற்ற அழகிய முகம் பொலியுமாறு அணிதலும்;

                 நாள்-கலை. நிறையுவா நாளில் மித கீழ்த்திசைக்கண் உதித்தும், பரிதி மேற்றிசையிற் படிந்தும் கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு தோன்றுதலின், அவற்றைப் புகார்ச் செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும் தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப் பொழுது வந்தமை பெற்றாம்; இது பரியாயவணி. திருமுகவாட்டி பெய்தலும் என்க.