சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை


10




15

உருவு கொண்ட மின்னே போலத்
திருவி லிட்டுத் திகழ்தரு மேனியள்
ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன்
பாத பீடிகை பணிந்தன ளேத்திப்
பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகிச்
சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என்னுற் றீரென



9
உரை
15

       உருவு கொண்ட மின்னே போல-பெண்ணுருவங்கொண்ட மின்னலைப் போலவும், திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - இந்திர வில்லைப்போலவும ஒளிவிட்டு விளங்குகின்ற திருமேனியை யுடைய அத்தெய்வம், ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி - அறவாழியினை உருட்டுகின்ற ஆதி முதல்வனது பாதபீடிகையை வணங்கித் துதித்து, பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பதியிலுறைகின்ற ஒரு பெண் வடிவுகொண்டு, சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி - சுதமிதியின் முகத்தை நோக்கி, ஈங்கு நின்றீர்என் உற்றீர் என-ஈண்டு நிற்கின்றவர்களே நீவிர் அடைந்த துன்பம் யாது என வினவ;

       உருவு கொண்ட மின்:இல்பொருளுவமை. மின்போலவும் திருவில்போலவும் என்க. திருவில் - வானவில். 1"திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என வருதல் காண்க. கடவுளர் இன்ன காலத்து இவ்வாறு தோன்றுவர் என்பது புலப்படாமையான், அங்ஙனம் தோன்றும் வானவில் அவர்க்கு உவமையாயிற்று. திருவில் - அழகிய ஒளியென்றுமாம். ஆதி முதல்வன் - புத்தன். அறவாழி - அறமாகிய திகிரி. பாதபீடிகை- புத்ததேவன் திருவடி யமைந்த பீடம்; உவவனத்திற் பளிக்கறையில் உள்ளது. பணிந்தனள் : முற்றெச்சம். முன்னரும் 2"பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி" என வந்தமை காண்க. நின்றீர் : வினைப்பெயர் ; அது மணிமேகலையையும் உளப்படுத்திற்று.


1 சிலப். 15:156. 2 மணி. 5: 96 .