சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

60




65

அருந்திறற் கட்வுட் டிருந்துபலிக் கந்தமும்
நிறைக்கற் றெற்றியும் மிறைக்களச் சந்தியும்
தண்டு மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும்
தூமக் கொடியுஞ் சுடர்த்தோ ரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து


60
உரை
65

அருந்திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் - அரிய திறலையுடைய கடவுளுடைய திருந்திய பலியிடுதற்குரிய தூண்களும், நிறைகல் தெற்றியும் - நிறுத்தப்பட்ட கல்லாலாகிய திண்ணையும், மிறைக்களச் சந்தியும்-வளைந்த இடத்தினையுடைய பல வழிகளுஞ் சேர்ந்த சந்துகளும், தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண்படுக்கும் உறையுட் குடிகையும் - கையிற் பிடிக்கும் கோலும் உண்ணும் கலமும் பிடித்து ஈமங் காப்போர் உண்டு துயிலும் உறைவிடமாகிய குடில்களும், தூமக்கொடியும் சுடர்த் தோரணங்களும்-புகையொழுங்காகிய கொடியும் சுடராகிய தோரணங்களும், ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும் பரக்கப்பெற்று ; கந்தின்கண் தெய்வமுறைதலை 1 "கலிகெழு கடவுள் கந்தங்

கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; 2 "மிறைக்கொளி திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம் ; இரக்குங் கலமுமாம் ; 3 "ஏலாது கவிழ்ந்த என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம்.


1 புறம். 52. 2 சீவக-284. 3 புறம். 189.