சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்


66
உரை
69

       சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் - பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும் தோண்டப்பட்ட குழியி லிடுவோரும், தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் - தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போரும், இரவும் பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன் தங்காமல், வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - வருவோரும் போவோரு மாகியவர்களின் நீங்காத ஒலியும் ;

       தாழ்வயின் - பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற நானூற்றின் 227, 237, 255, 363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முழுமக்கட் டாழி எனப்படும். சுடுவோர் முதலியோராய் வருவோர் பெயர்வோர் என்க.