சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை




130

கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி
விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங்
கெம்மனை காணாய் ஈமச் சுடலையின்
வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத்
தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும்


127
உரை
131

        கண்டனன் வெரீஇ - கண்டு அஞ்சி, கடு நவை எய்தி - அப் பேயாற் பிடிக்கப்பட்டு, விண்டு - அவ்விடத்தின் நீங்கி, ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து - ஓர் திசையிற் கூப்பிட்டுக் கொண்டு சென்று, ஈங்கு எம்மனை காணாய் - எம் அன்னையே இங்கே காண்பாயாக, ஈமச்சுடலையின் - ஈமமாகிய மயானத்தின் கண் உள்ள, வெம்முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என - கொடிய முது பேய்க்கு என் உயிரைக் கொடுத்துவிட்டேன் என்று கூறி, தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் - தன் தாயின் முன்னே வீழ்ந்து உயிர் துறக்கவும் ;

சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் கண்டனன் வெரீஇ என்க. கடு நவை-மிக்க துன்பம் ; ஆவது-பேய்க் கோட்படுதல். 1"கழல்கட் கூளிக் கடுநவைக் பட்டோர்" என்பதுகாண்க. ஈமச் சுடலை:இருபெயரொட்டு; ஈமத்தையுடைய சுடலையென்றுமாம். ஈமம்- பிணஞ் சுடும் விறகடுக்கு. மெய் வைத்தல் - உடம்பைப் போகடுதல் ; இறத்தல்.

1 சிலப். 5-225.