சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை




30


வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்
அஞ்செஞ் சாயல் நீயு மல்லது
நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாஞ்
சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்
சக்கர வாளக் கோட்ட மஃதென
மிக்கோய் கூறிய உரைப்பொரு ளறியேன்
ஈங்கிதன் காரண மென்னை யோவென


27
உரை
33

வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அமசெஞ்சாயல் நீயும் அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத் தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய நகரின்கண் உள்ளோரனைவரும், சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார், சக்கரவாளக்கோட்டம் அஃது என - அதனைச் சக்கர வாளக்கோட்டம் என்று, மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய மொழியின் பொருளை அறியேன், ஈங்கு இதன் காரணம் என்னையோ என - இங்ஙனம் கூறுவதன் காரணம் யாதோ என்று சுதமதி கேட்ப;

வஞ்ச விஞ்சையன் என்றாள், தன்னைக் 1 கவர்ந்து சென்று பின்னர்த்தன்னைவிட்டுப் பிரிந்தமையான். நெடுநகர்-காவிரிப்பூம்பட்டினம்.


1 மணி. 3: 28 - 41.