துயிலெழுப்பிய காதை




80
அவலித்த நெஞ்சின் ஆடவ ரின்றியும்
புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென
இடிக்குரன் முழக்கத் திடும்பலி யோதையும்

77
உரை
80

        வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் - பகைமையைக் கருதிய உள்ளமுடைய வீரர் இல்லாதிருக்கவும், புலிக்கணத்து அன்னோர்-புலிக்கூட்டத்தினை யொத்த வீரர்கள், தசதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என-பூதத்தையுடைய நாற்சந்தியிலே கொடியணிந்த தேரினையுடைய எம் அரசன் வெற்றிபெறுக என்று, இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்
இடியனைய குரல் முழக்கத்துடன் பலியிடுகின்ற ஓசையும் ;

வலித்த-போரினைக் கருதிய என்றுமாம். ஆடவர்-ஈண்டுப்பகைவர்.