துயிலெழுப்பிய காதை




90
கேட்டுளங் கலங்கி ஊட்டிரு ளழுவத்து
முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த
சக்கர வாளக் கோட்டத் தாங்கண்
பலர்புகழ் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்

87
உரை
93

        கேட்டு உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி ஊட்டினாற்போன்ற இருட்பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற அழகிய பற்களையுடைய சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய
மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத் தாங்கண் - சக்கரவாளக் கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பெரிய வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில் ஒருபக்கத்தில் இருத்தலும்;

ஊட்டுதல் - பூசுதல். அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒருபுடை யிருத்தலும் என்க.