துயிலெழுப்பிய காதை

15




20

உவவனம் புகுந்தாங் குறுதுயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந்நகர்க் காண
வந்தே னஞ்சல் மணிமே கலையான்
ஆதிசான் முனிவன் அறவழிப் படுஉம்
ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர்
வஞ்சமில் மணிபல் லவத்திடை வைத்தேன்

15
உரை
22

       உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும்-உவவனத்திற் புகுந்து ஆண்டு மிகுந்த உறக்கத்துடனிருக்கும், சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி - சுதமதியை உறக்கத்தினின்றும் எழுப்பி, இந்திரகோடனை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்-யான் மணிமேகலா தெய்வம் அஞ்சாதே இந்நகரின் இந்திர விழாக்காண வந்தேன், ஆதிசான் முனிவன் அற வழிப்படுஉம்-புத்த தேவனின் அறநெறியிற் செல்லும், ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் ஏது நிகழ்ச்சி மணி மேகலைக்கு முற்றியதாகலின் விஞ்சையிற் பெயர்ந்நு நின் விளங்கிழைதன்னை-நின் மெல்லியலை என் வித்தையினாலே பெயர்த்து, ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்-ஒரு வகையான வஞ்சனையும் இல்லாத மணிபல்லவத்தின்கண் வைத்துளேன் ;

       துயிலிடை : உருபு மயக்கம், கோடணை - முழக்கம் ; பல்வகை முழக்கத்தினையுடைய விழாவிற்காயிற்று வினைகள் தம் பயனையூட்ட எதிர்ப்படுவதனை, ஏது நிகழ்ச்சி அல்லது ஏது என்பது பௌத்தநூல் வழக்கு.