துயிலெழுப்பிய காதை

50



பண்பில் காதலன் பரத்தமை நோனாது
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
தெருட்டவுந் தெருளா தூடாலொடு துயில்வோர்
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும்

50
உரை
53

        பண்பில் காதலன் பரத்தமை நோனாது. குணமற்ற காதலனுடைய பரத்தமையைப் பொறாமல், உண் கண் சிவந்தாங்கு ஒல்கு கொடிபோன்று - அசைகின்ற கொடிபோல மையுண்ட கண்கள் சிவந்து, தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்-தெளி விக்கவும் தெளியாமல் ஊடலுடன் துயில்கின்ற மகளிர், விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் - மணம் பொருந்திய மலரணையில் தம்மால் விரும்பப்படுகின்ற கொழுநரைத் தழுவவும் ;

பண்பு - ஈண்டு அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை;பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்; 1"பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே துணையைத் தழுவவு மென்க.

1 குறள். 1311.