துயிலெழுப்பிய காதை

60



இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும்
காவுறை பறவையும் நாவு ளழுந்தி
விழவுக்களி யடங்கி முழவுக்கண் துயின்று
பழவிறன் மூதூர் பாயல்கொள் நடுநாள்

60
உரை
63

       இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் - இறப்புகளில் வாழ் கின்ற புறாக்களும் நிறைந்த நீரிலுள்ள பறவைகளும், கா உறை பறவைகளும நா உள் அழுந்தி-பொழில்களில் உறைகின்ற புட்களும் நா உள்ளே அழுந்தி, விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று- விழாவினாலுண்டாகிய களிப்பு அடங்கி முழவுகளின் கண் துயின்று, பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - பழைய வலி யினையுடைய தொன்னகரம் துயிலினைக்கொண்ட இடையா மத்தில்;

நாவுள்ளழுந்தலாவது : ஒலியாதிருத்தல். அழுந்தி, அடங்கி, துயின்று என்னும் இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின் மேல் நின்றன ; அழுந்தி முதலியவற்றைச் செயவனெச்சமாகத்
திரித்தலுமாம்.