மணிபல்லவத்துத் துயருற்ற காதை




40
குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில்
தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி
எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக்
கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து
வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து
ஐயா வோவென் றழுவோள் முன்னர்

35
உரை
43

       பாங்கினம் காணாள்-பக்கத்திலுள்ள இனங்களைக் காணாத வளாய், குரல்தலை கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்தை இடத்தேயுடைய குழல் அவிழ்ந்து பின்னே வீழ, அரற்றினள் கூஉய் - கூவிப் புலம்பி, அழுதனள் ஏங்கி - ஏங்கி அழுது, வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ்துயர் உறுவோள் - ஆழமாகிய துன்பத்தின்கண்ணே பொருந்தினோள் மிக்க துயரமடைந்த துன்பத்தைப் புலப்படுத்தும் மொழிகளால், தந்தையை உள்ளி - தந்தையாகிய கோவலனை நினைந்து, எம் இதில் படுத்தும் வெவ்வினை உருப்ப-எம்மை இவ்வகைத் துன்பத்தின்கண் அகப்படுத்தும் கொடிய தீவினையானது வந்து உருப்ப, கோற்றொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து-திரட்சியாகிய வளையல்களை யணிந்த என் அன்னை கண்ணகியோடு வேறு நாட்டை அடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுவோள் முன்னர் - கூரிய வாளினாள் வெட்டுண்டு வருந்திய மணிப்பூண் தாங்கிய மார்பினையுடைய ஐயாவோ என்று அழுகின்றவள் முன்னே ;
       குரல் - கூந்தலின் திரட்சியுமாம். அரற்றினள், அழுதனள் என்பன முற்றெச்சம். உறுவோள் விழுமக்கிளவியின் அழுவோள் எனக் கூட்டுக. உருப்ப - முதிர; வெகுள என்றுமாம். ஓகாரம் புலம்பலில் வந்தது.