முகப்பு |
தொடக்கம் |
அறவுரை
|
|
2743. |
- இலங்கு குங்கும மார்பன் ஏந்து சீர்
-
நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை
-
வலம் கொண்டு ஆய் மலர்ப் பிண்டி மா நிழல்
-
கலந்த கல் மிசைக் கண்டு வாழ்த்தினான்
|
|
|
|
|
2744. |
- உரிமை தன்னொடும் வலம் கொண்டு ஓங்கு சீர்த்
-
திருமகன் பணிந்து இருப்பச் செய்தவர்
-
இரு நிலம் மனற்கு இன்பமே எனப்
-
பெரு நிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான்
|
|
|
|
|
2745. |
- தெருளலேன் செய்த தீவினை எனும்
-
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர்
-
அருளுமின் எனக்கு அடிகள் என்றனன்
-
மருள் விலங்கிய மன்னர் மன்னனே
|
|
|
|
|
2746. |
- பால் கடல் பனி மதி பரவைத் தீம் கதிர்
-
மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே
-
நூல் கடன் மாதவன் நுனித்த நல் அறம்
-
கோல் கடன் மன்னனுக்கு உரைக்கும் என்பவே
|
|
|
|
|
2747. |
- தேன் நெய் தோய்ந்தன தீவிய திருமணி அனைய
-
வானின் உய்ப்பன வரகதி தருவன மதியோர்
-
ஏனை யாவரும் அமுது எனப் பருகுவ புகல்வ
-
மானம் இல் உயர் மணி வண்ணன் நுவலிய வலித்தான்
|
|
|
|
|
2748. |
- அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும்
-
திரு மெய் நீங்கிய துன்பமும் தெளி பொருள் துணிவும்
-
குருமை எய்திய குண நிலை கொடை பெறு பயனும்
-
பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய்
|
|
|
|
|