முகப்பு |
தொடக்கம் |
தாயத் தீர்வு
|
|
2894. |
- சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய
-
வார் அணி வன முலை வஞ்சிக் கொம்பு அனார்
-
போர் அணி புலவு வேல் கண்கள் பூத்தன
-
நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே
|
|
|
|
|
2895. |
- பொன் வரை நிலாக் கதிர் பொழிந்து போர்த்த போல்
-
தென் வரைச் சந்தனம் திளைக்கும் மார்பினான்
-
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
-
இன் உரை கொடான் கொடிக் கோயில் எய்தினான்
|
|
|
|
|
2896. |
- அம் சுரை பொழிந்த பால் அன்ன மெல் மயிர்ப்
-
பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார்
-
மஞ்சு இவர் மதிமுகம் மழுங்க வைகினார்
-
நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே
|
|
|
|
|
2897. |
- வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேகப்
-
புள் வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
-
கள் வயிற்று அலர்ந்த கோதைக் கலாப வில் உமிழும் அல்குல்
-
ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார்
|
|
|
|
|
2898. |
- கிளிச் சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்கக்
-
குளித்து நீர் இரண்டு கோலக் கொழுங் கயல் பிறழ்பவே போல்
-
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட
-
அளித்த தார் அலங்கல் ஆழி அவன் துறவு உரைத்தும் அன்றே
|
|
|
|
|
2899. |
- புனை மருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
-
கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை உரிவை போர்த்த
-
துனை குரல் முரசத் தானைத் தோன்றலைத் தம்மின் என்றான்
-
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்
|
|
|
|
|
2900. |
- கொடி அணி அலங்கல் மார்பில் குங்குமக் குன்றம் அன்னான்
-
அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்னப்
-
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
-
இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே
|
|
|
|
|
2901. |
- ஊன் உடைக் கோட்டு நாகு ஆன் சுரிமுக ஏற்றை ஊர்ந்து
-
தேன் உடைக் குவளைச் செங் கேழ் நாகு இளந் தேரை புல்லிக்
-
கான் உடைக் கழனிச் செந்நெல் கதிர் அணைத் துஞ்சும் நாடு
-
வேல் மிடைத் தானைத் தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான்
|
|
|
|
|
2902. |
- கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடும்
-
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்
-
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம்
-
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான்
|
|
|
|
|
2903. |
- குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும்
-
சென்று மொய்த்து இமிரும் யானைச் சீவகற்கு இளைய நம்பி
-
மன்றல் வீற்று இருந்து மின்னும் மணிக் குவடு அனைய தோளான்
-
ஒன்றும் மற்று அரசு வேண்டான் உவப்பதே வேண்டினானே
|
|
|
|
|
2904. |
- பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இவ் உடம்பு என்று எண்ணி
-
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தடக்கை வையாது
-
ஒலி உடை உருமுப் போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல்
-
கலி கடிந்து உலகம் காக்கும் காளையைக் கொணர்மின் என்றான்
|
|
|
|
|
2905. |
- கழு மணி ஆர மார்பின் காவலன் மக்கள் காய் பொன்
-
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
-
தழு மலர்க் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி
-
விழுமணிப் பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான்
|
|
|
|
|
2906. |
- பால் வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம்
-
கோல் வளையாமல் காத்து உன் குடை நிழல் துஞ்ச நோக்கி
-
நூல் விளைந்து அனைய நுண்சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
-
மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்
|
|
|
|
|
2907. |
- வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
-
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின்
-
வாய்ப்படல் இன்றிப் பொன்றும் வல்லன் ஆய் மன்னன் கொள்ளின்
-
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே
|
|
|
|
|
2908. |
- நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின்
-
புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள்கை
-
மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
-
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான்
|
|
|
|
|
2909. |
- ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணித் தேரை வல்லான்
-
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும்
-
ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும்
-
தார் நில மார்ப வேந்தர் தன்மையும் அன்னது ஆமே
|
|
|
|
|
2910. |
- காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறுபோல
-
ஆய்ந்த அறிவுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி
-
வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
-
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான்
|
|
|
|
|
2911. |
- குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன்
-
அடி வழிப் படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி
-
நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்திக்
-
கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான்
|
|
|
|
|
2912. |
- சேல் நடந்தாங்கும் ஓடிச் சென்று உலாய்ப் பிறழும் வாள் கண்
-
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
-
கால் நடந்த அனைய மான் தேர்க் காளையைக் காவல் மன்னன்
-
தான் உடன் அணிந்து தன் போல் இளவரசு ஆக்கினானே
|
|
|
|
|
2913. |
- கூர் எயிறு அணிந்த கொவ்வைக் கொழுங் கனிக் கோலச் செவ்வாய்
-
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம்
-
சீர் உடைச் செம் பொன் கண்ணிச் சிறுவனைச் செம் பொன் மாரி
-
பேர் அறைந்து உலகம் உண்ணப் பெரு நம்பி ஆக வென்றான்
|
|
|
|
|
2914. |
- தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற
-
பொன் திகழ் உருவில் தம்பி புதல்வனைத் தந்து போற்றி
-
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான்
-
குன்று இனம் குழீஇய போலும் குஞ்சரக் குழாத்தி னானே
|
|
|
|
|
2915. |
- நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் நித்திலம் விளைந்து முற்றி
-
நலம் செய்த வைரக் கோட்ட நாறும் மும் மதத்த நாகம்
-
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
-
உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான்
|
|
|
|
|
2916. |
- நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
-
வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில்வலான் தோழர் மக்கள்
-
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி தன் கண்கள் ஆகப்
-
பால் கடல் கேள்வி யாரைப் பழிப்பு அற நாட்டி னானே
|
|
|
|
|
2917. |
- காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர்
-
மா வலம் விளைத்த கோட்டு மழ களிற்று அரசன் அன்னான்
-
பூ அலர் கொடி அனாரை விடுக்கிய கோயில் புக்கான்
-
தூ அலர் ஒலியலார் தம் வலக் கண்கள் துடித்த அன்றே
|
|
|
|
|