முகப்பு |
தொடக்கம் |
துறவு வலி உறுத்தல்
|
|
2982. |
- கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த கூர் இலை
-
மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல்
-
செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார்
-
அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான்
|
|
|
|
|
2983. |
- நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
-
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது
-
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்
-
பற்றொடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள்
|
|
|
|
|
2984. |
- உப்பு இலிப் புழுக்கல் காட்டுள் புலை மகன் உகுப்ப ஏகக்
-
கைப் பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
-
மைப் பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
-
இப் பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்மின் என்றான்
|
|
|
|
|
2985. |
- கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர்த் தறுகண் ஆளி
-
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே
-
பல் வினை வெள்ளம் நீந்திப் பகா இன்பம் பருகின் அல்லால்
-
நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே
|
|
|
|
|
2986. |
- ஆற்றிய மக்கள் என்னும் அருங் தவம் இலார்கள் ஆகின்
-
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே
-
வேற்றுவர் என்று நில்லா விழுப் பொருள் பரவை ஞாலம்
-
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்மின் நீரும் என்றான்
|
|
|
|
|
2987. |
- காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை
-
ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சித் தேற்ற
-
மாதரார் நெஞ்சம் தேறி மாதவம் செய்தும் என்றார்
-
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடுங் கணாரே
|
|
|
|
|
2988. |
- தூமம் சால் கோதை யீரே தொல் வினை நீத்தம் நீந்தி
-
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி
-
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்மின் என்றான்
-
காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சனக் குன்றம் அன்னான்
|
|
|
|
|
2989. |
- நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
-
ஆடகக் கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை
-
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம்
-
கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார்
|
|
|
|
|
2990. |
- சாந்தம் கிழிய முயங்கித் தட மலரால்
-
கூந்தல் வழிபட்ட கோவே நீ செல் உலகில்
-
வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல்
-
காய்ந்து அருளல் கண்டாய் எனத் தொழுதார் காரிகையார்
|
|
|
|
|