முகப்பு |
தொடக்கம் |
சமவ சரண வருணனை
|
|
2999. |
- நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல்
-
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
-
விருந்து பட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி
-
சுரந்தன சுடர் மணிப் பாண்டில் என்பவே
|
|
|
|
|
3000. |
- மங்குலாய் அகில் புகை மணந்து கற்பகப்
-
பொங்கு பூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணம்
-
தங்கி இத் தரணியும் விசும்பும் தாமரோ
-
செங் கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே
|
|
|
|
|
3001. |
- திலக முக் குடைச் செல்வன் திருநகர்
-
பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர்
-
குலவு பல்லியம் கூடிக் குழுமி நின்று
-
உலக வெள்ளம் ஒலிப்பது போன்றவே
|
|
|
|
|
3002. |
- கான் நிரைத்தன காவொடு பூம் பொய்கை
-
தேன் நிரைத்தன செம் பொன் நெடு மதில்
-
மேல் நிரைத்தன வெண் கொடி அக் கொடி
-
வான் உரிப்பன போன்று மணந்தவே
|
|
|
|
|
3003. |
- கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
-
சூலம் நெற்றிய கோபுரத் தோற்றமும்
-
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று அரோ
-
காலம் உற்று உடன் கண் உற்ற போன்றவே
|
|
|
|
|
3004. |
- வாயில் தோரணம் கற்பக மாலை தாழ்ந்து
-
ஏயிற்று இந்திரன் பொன் நகரின் புறம்
-
போயிற்றே அகிலின் புகை போர்த்து உராய்
-
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே
|
|
|
|
|
3005. |
- செய்ய தாமரைப் பூவினுள் தேம் கமழ்
-
பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று
-
ஐயம் செய்து அடு பால் நிறப் புள் இனம்
-
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே
|
|
|
|
|
3006. |
- மல்லன் மாக் கடல் அன்ன கிடங்கு அணிந்து
-
ஒல் என் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
-
செல்வ நீர்த் திருக் கோயில் இம் மண்மிசை
-
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே
|
|
|
|
|
3007. |
- விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார்த்
-
துளங்கு ஒளி மணி வணன் தொழுது துன்னினான்
-
வளம் கெழு மணிவரை நெற்றிப் பால் கடல்
-
இளங் கதிர்ப் பருதி ஒத்து இறைவன் தோன்றினான்
|
|
|
|
|
3008. |
- வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
-
வனை கதிர்த் தடக்கை வைத்து இருந்த வாமனார்
-
கனை கதிர்த் திருமுகம் அருக்கன் ஆக வான்
-
புனை மலர்த் தாமரை பூத்தது ஒத்தவே
|
|
|
|
|
3009. |
- இரிந்தன இருவினை இலிர்த்த மெய்ம் மயிர்
-
சொரிந்தன கண் பனி துதித்துக் காதலால்
-
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்த்
-
திரிந்தனன் வல முறை திலக மன்னனே
|
|
|
|
|
3010. |
- முத்து ஒளிர் தாமமும் உருவ மாமணித்
-
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும்
-
தத்து நீர்த் தண் கடல் பவழத் தாமமும்
-
வைத்த பூந் தாமமும் மலிந்து தாழ்ந்தவே
|
|
|
|
|
3011. |
- மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல்
-
அணி மயிர்க் கவரிகள் அமரர் ஏந்தினார்
-
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர்
-
பணி மணிக் கார் இருள் பருகு கின்றதே
|
|
|
|
|
3012. |
- முழாத் திரள் மொய்ம் மலர்த் தாமம் தாழ்ந்து மேல்
-
வழாத் திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம்
-
குழாத்தொடும் இறை கொளக் குனிந்து கூய்க் குயில்
-
விழாக் கொள விரிந்தது வீரன் பிண்டியே
|
|
|
|
|
3013. |
- பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
-
விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான்
-
உண்டு இவண் அற அமிர்து உண்மினோ எனக்
-
கொண்டன கோடணை கொற்ற முற்றமே
|
|
|
|
|
3014. |
- வானவர் மலர் மழை சொரிய மன்னிய
-
ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன்
-
தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி
-
கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான் அரோ
|
|
|
|
|
3015. |
- குரு குலம் சீவக குமரன் கோத்திரம்
-
அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
-
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான்
-
புரி மணி வீணைகள் புலம்ப என்பவே
|
|
|
|
|
3016. |
- மன்னவன் துறவு எனத் துறத்தல் மாண்பு எனப்
-
பொன் வரை வாய் திறந்த ஆங்குப் புங்கவன்
-
இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது
-
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே
|
|
|
|
|