சேணிகன் வரவு
 
3041.
  • மட்டு அலர் வன மலர்ப் பிண்டி வாமனார்
  • விட்டு அலர் தாமரைப் பாதம் வீங்கு இருள்
  • அட்டு அலர் பருதியின் அளிக்கச் செல்லும் நாள்
  • பட்டது ஓர் பொருளின் இனிப் பழிச்சு கின்றதே
   
3042.
  • கயல் இனம் உகளிப் பாய முல்லை அம் பொதும்பில் காமர்
  • புயல் இனம் மொக்குள் வன்கண் குறுமுயல் புலம்பிக் குன்றத்து
  • அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல்
  • வயல் வளர் கரும்பில் பாயும் மகத நாடு என்பது உண்டே
   
3043.
  • இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய்ச்
  • சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதிப்
  • பெருங் கடி நகரம் பேசின் இராசமா கிருகம் என்பர்
  • அருங் கடி அமரர் கோமான் அணிநகர் ஆயது ஒன்றே
   
3044.
  • எரி மிடைந்த அனைய மாலை இன மணி திருவில் வீசும்
  • திருமுடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
  • அருமுடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன்
  • திருவடி விருந்து செய்வான் திரள் முரசு அறைவித்தானே
   
3045.
  • பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல்
  • மின் ஆர் மணிப் பூணவன் மேவி விண்காறும் நாறும்
  • முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர்
  • மன் ஆர வாய்க் கொண்டு உமிழ்ந்தான் மணிமாலை வேலோன்
   
3046.
  • தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
  • தேம் பாய சாந்தம் மெழுகிக் கலன் தேறல் மாலை
  • தாம் பால தாங்கிப் புகழ் தாமரைக் குன்றம் அன்ன
  • ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறினானே
   
3047.
  • எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணிச் செப்பு வெள்ளம்
  • பொறிவரி வண்டு பாடும் பூஞ் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு
  • அறிவரிது உணர்வு நாணித் தலை பனித்து அஞ்சும் சாந்தம்
  • செறி இரும் பவழச் செப்புத் தெண்கடல் திரையின் நேரே
   
3048.
  • வந்து தேன் மயங்கி மூசு மலயச் செஞ் சாந்தம் ஆர்ந்த
  • சந்தனச் செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றாச்
  • சுந்தரம் பெய்த யானைத் தூ மருப்பு இயன்ற வெண் செப்பு
  • அந்தரத்து அலர்ந்த பல் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ
   
3049.
  • மை பொதி குவளை வாள் கண் மல்லிகைக் கோதை நல்லார்
  • நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும்
  • கொய் சுவல் புரவி மான்தேர் குழுமணி ஓடை யானை
  • மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரைப் பலி சுமந்த அன்றே
   
3050.
  • கொடிக் குழாம் குஞ்சி பிச்சக் குழாம் நிறை கோல மாலை
  • முடிக் குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும்
  • குடைக் குழாம் இவற்றின் பாங்கர்க் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும்
  • படைக் குழாம் பாரில் செல்லும் பால் கடல் பழித்த அன்றே
   
3051.
  • கனை கடல் கவரச் செல்லும் கண மழைத் தொகுதி போலும்
  • நனை மலர்ப் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றிப்
  • புனை முடி மன்னர் ஈண்டிப் பொன் எயில் புறத்து விட்டார்
  • வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே
   
3052.
  • வண்டு சூழ் பூப்பலி சுமந்து தான் வலம்
  • கொண்டு சூழ்ந்து எழுமுறை இறைஞ்சிக் கோன் அடி
  • எண்திசை அவர்களும் மருள ஏத்தினான்
  • வெண் திரைப் புணரி சூழ் வேலி வேந்தனே
   
3053.
  • பகல் வளர் பவழச் செந்தீப் பருதி முன் பட்டதே போல்
  • இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது
  • அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி அவிந்து இருப்ப மன்னன்
  • முகில் கிழி மதியம் போலும் முனிக்குழாம் நோக்கினானே
   
3054.
  • கண் வெறி போக ஆங்கு ஓர் கடுந் தவன் உருவம் நோக்கி
  • ஒண் நெறி ஒருவிக் கோமான் ஒளி திரண்டு இருந்ததாம் கொல்
  • விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன் கொல் என்று
  • எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே
   
3055.
  • விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து விண்ணவன்
  • இளங் கதிர் எனத் துறந்து இருப்பக் கண்டனம்
  • வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி
  • துளங்கினன் எனத் தொழுது இறைஞ்சினான் அரோ
   
3056.
  • மன்னவ கேள்மதி வானில் வாழ்பவர்
  • பொன் இயல் கற்பகப் போக பூமியார்
  • என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி
  • சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே
   
3057.
  • அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த ஆய் மலர்க்
  • கடி கமழ் தாமரைக் கண்ணினான் இவன்
  • வடிவமே வாய் திறந்து உரைக்கும் வானவன்
  • ஒடிவறு பேர் ஒளி உட்கத் தக்கதே
   
3058.
  • திருவினோடு அகன்ற மார்பின் சீவக சாமி என்பான்
  • உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை
  • மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார்
  • அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான்