தொடக்கம்
5.
மக்கள் யாக்கையும் செல்வமும்
பெறுதல் அரிது எனல்
வினைபல வலியினாலே
வேறுவேறு யாக்கை ஆகி
நனிபல பிறவி தன்னுள்
துன்புறூஉம் நல்உயிர்க்கு
மனிதரின் அரியது ஆகும்
தோன்றுதல்; தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும்
செல்வமும் அன்னதேயாம்.
உரை