தொடக்கம் |
|
|
3.
|
நெஞ்சறிவுறூஉ
நீல
நிறத்தனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து |
|
கோலம்
குயின்ற குழல் வாழி நெஞ்சே!
கோலம் குயின்ற குழலும் கொழும் சிகையும்
காலக் கனல் எரியின் வேம்வாழி நெஞ்சே!
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே! |
|
உரை
|
|
|
|
|
4.
|
இதுவும்
அது
வித்தகர்
செய்த விளங்கு முடி கவித்தார்
|
|
மத்தக
மாண்பு அழிதல் காண் வாழி நெஞ்சே!
மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே!
உத்தம நன்னெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே! |
|
உரை
|
|
|
|
|
5.
|
மக்கள்
யாக்கையும் செல்வமும்
பெறுதல் அரிது எனல்
வினைபல
வலியினாலே |
|
வேறுவேறு
யாக்கை ஆகி
நனிபல பிறவி தன்னுள்
துன்புறூஉம் நல்உயிர்க்கு
மனிதரின் அரியது ஆகும்
தோன்றுதல்; தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும்
செல்வமும் அன்னதேயாம். |
|
உரை
|
|
|
|
|
6.
|
இதுவும்
அது
உயர்குடி நனிஉள் தோன்றல் |
|
ஊனம்இல்
யாக்கை ஆதல்
மயர்வு அறு கல்வி கேள்வித்
தன்மையால் வல்லர் ஆதல்
பெரிது உணர் அறிவே ஆதல்
பேரறம் கோடல் என்று ஆங்கு
அரிது இவை பெறுக லோடே
பெற்றவர் மக்கள் என்பார்.
|
|
உரை
|
|
|
|
|
7.
|
கற்புடை
மகளிர்
நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும் |
|
பீடுறும்
மழை பெய்க எனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே. |
|
உரை
|
|
|
|
|
8.
|
கற்பு
இல் மகளிர்
பள்ள
முதுநீர்ப் பழகினும் மீன் இனம் |
|
வெள்ளம்
புதியது காணின் விருப்புறூஉம்
கள்அவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள் நீ. |
|
உரை
|
|
|
|
|
9.
|
இதுவும்
அது
உண்டியுள் காப்பு உண்டு; உறுபொருள் காப்பு உண்டு;
|
|
கண்ட
விழுப்பொருள் கல்விக்குக் காப்பு உண்டு;
பெண்டிரைக் காப்பது இலம்என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்று அறிந்தோரே. |
|
உரை
|
|
|
|
|
10.
|
இதுவும் அது
எத்துணை
ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி |
|
புற்பனி
உக்க மரத்து இலை நுண் மயிர்
அத்துணையும் பிறர் அஞ்சொலினார் மனம்
புக்கனம் என்று பொதி அறைப் பட்டார். |
|
உரை
|
|
|
|