தொடக்கம் |
|
|
21.
|
புலால் மறுத்தல்
தகாது
உயிர் கொல்வானின் |
|
மிகாமை
இலை பாவம்
அவா விலையில் உண்பான்
புலால் பெருகல் வேண்டும்
புகா வலை விலங்காய்ப்
பொறாது பிற ஊன் கொன்று
அவா விலையில் விற்பானும்
ஆண்டு அதுவே வேண்டுமால். |
|
உரை
|
|
|
|
|
22.
|
ஊன்
உண்போரின் இழிதகைமை
பிறவிக்
கடல்அகத்து ஆராய்ந்து உணரின் |
|
தெறுவதில்
குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவின்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர். |
|
உரை
|
|
|
|
|
23.
|
செவியறிவுறூஉ
உயிர்கள்
ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின் |
|
செயிர்கள்
நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனிர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர் |
|
உரை
|
|
|
|
|
24.
|
தவத்தின்
மாண்பு
பொருளோடு
போகம் புணர்தல் உறினும் |
|
அருளுதல்
சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருள்இல் கதிச் சென்று இனி இவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே. |
|
உரை
|
|
|
|
|
25.
|
இதுவும்
அது
தவத்தின்
மேல்உரை தவத்திறை |
|
தனக்கு
அலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம்மொழி
யொடும்செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாது பல்
வகை உயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை
அனையதும் அறி நீ. |
|
உரை
|
|
|
|
|
26.
|
இணைவிழைச்சு
எண்
இன்றியே துணியும் எவ்வழியானும் ஓடும் |
|
உள்நின்று
உருக்கும் உரவோர் உரைகோடல் இன்றாம்
நண் இன்று ஏயும் நயவாரை நயந்து நிற்கும்
கண் நின்று காமம் நனி காமுறு வாரை வீழ்க்கும். |
|
உரை
|
|
|
|
|
27. |
இதுவும்
அது
சான்றோர்
உவர்ப்பத் தனிநின்று |
|
பழிப்ப
காணார்
ஆன்றாங்கு அமைந்த குரவர்
மொழிகோடல் ஈயார்
வான்தாங்கி நின்ற புகழ்மாசு
படுப்பர் காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்
படுமாயி னக்கால். |
|
உரை
|
|
|
|
|
28.
|
இதுவும்
அது
மாஎன்று
உரைத்து மடல்ஏறுப மன்று தோறும் |
|
பூஎன்று எருக்கின்
இணர்சூடுப புன்மைகொண்டே
பேய்என்று எழுந்து பிறர் ஆர்ப்பவும் நிற்பர்காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க்கொள்வது ஆயினக்கால். |
|
உரை
|
|
|
|
|
29.
|
இதுவும்
அது
நக்கே
விலாசிறுவர் நாணுவர் |
|
நாணும் வேண்டார்.
புக்கே கிடப்பர் கனவும்
நினைகையும் ஏற்பர்
துற்றூண் மறப்பர் அழுவர் நனி
துஞ்சல் இல்லார்
நற்றோள் மிகைபெரிது நாடுஅறி
துன்பம் ஆக்கும். |
|
உரை
|
|
|
|
|
30. |
இதுவும்
அது
அரசொடு
நட்டவர் ஆள்ப விருத்தி |
|
அரவொடு நட்டவர்
ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே. |
|
உரை
|
|
|
|