31.

         கள்ளாமை

பீடுஇல் செய்திகளால் களவில் பிறர்
  வீடுஇல் பல்பொருள் கொண்ட பயன்எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றி வைத்து
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே.
  
உரை
   

32.

          பொய்யாமை

பொய்யின் நீங்குமின்; பொய் இன்மை பூண்டு கொண்டு
  ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக்
கௌவையில் உலகு எய்துதல் கண்டதே.
உரை
   

33.

         இதுவும் அது

கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
  நல்லில் செல்லல்களால் நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அது கடிந்து ஓம்புமின்.
உரை
   

34.

           கொல்லாமை

உலகுடன் விளங்க உயர் சீர்த்தி நிலை கொள்ளின்

 

நிலையில் கதி நான்கின் இடைநின்று தடுமாறும்
அலகில் துயர்அஞ்சின் உயிர்அஞ்ச வரும் வஞ்சக்
கொலை ஒழிமின் என்று நனி கூறினர் அறிந்தார்.

உரை
   

35.

      செல்வம் நிலையாமை

வெள்ளம் மறவி விறல் வேந்தர் தீத்தாயம்
  கள்வர்என்று இவ்வாறின் கை கரப்பத் தீர்ந்து அகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ.
உரை
   

36.

         இதுவும் அது

ஒழிந்த பிறஅறன் உண்டு என்பார் உட்க
  அழிந்து பிறர்அவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர் நோய்க்கு அல்லாப் பவரே.
உரை
   

37.

         இதுவும் அது

இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம்
  மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிது ஆகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் பொருளைத்
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே.
உரை
   

38.

         இதுவும் அது

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிது ஆகி
  நாண்டல் சிறிதாய் நடுக்கம் பல தரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே.
உரை
   

 

39.

          இதுவும் அது

இல்எனின் வாழ்க்கையும் இல்லை உண்டாய்விடின்
  கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்என்று காட்டும் புணர்வதும் அன்றே.
உரை
   

40.

         இளமை நிலையாமை

வேல்கண் மடவார் விழைவு ஒழிய யாம் விழையக்
  கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழைய தாம்
நாற்பது இகந்தாம் நரைத் தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே.
உரை