41.

             இதுவும் அது

இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்ற அல்ல;
  வளமையும் அஃதேபோல் வைகலும் துன்ப வெள்ளம்
உளஎன நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும்
விளைநிலம் உழுவார் போல் வித்துநீர் செய்து கொண்மின்.
உரை
   

42.

            துறவு

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே.
உரை
   

43.

        இதுவும் அது

உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
  மற்றது தோய்த்துக் கழுவுதல் என் ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குறு மாறு.
உரை
   

44.

        இதுவும் அது

தானம் செய்திலம் தவமும் அன்னதே
  கானம் தோய் நிலவிற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்கு உய்தல் உண்டோ
மானம் தீர்ந்தவர் மாற்றம் பொய் அல்லவால்.
  
உரை
   

45.

        மெய் உணர்தல்

பருவந்து சாலப் பலர்கொல் என்று எண்ணி
  ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன் என்னுமாறே.
  
உரை
   

46.

           பழவினை

உய்த்து ஒன்றி ஏர்தந்து உழஉழுது ஆற்றவும்
  வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படுமாறே.
  
உரை
   

47.

        பொருள் மாண்பு

குலம் தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
  அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ.
  
உரை
   

48.

           நட்பு

கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண்
  நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓரிடத்து ஏகி நிற்பவே.
  
உரை
   

49.

      பேதைமை

தெண்ணீர் பரந்து திசைதோறும்
      போய்கெட்ட
எண்ணெய் கொண்டு ஈட்டற்கு
    இவறுதல் என் ஒக்கும்
பெண் மனம் பேதித்து
    ஒருப்படுப்பேன் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்பு
    எண்ணுமாறே.
  
உரை
   

50.

      பொது மகளிர் இயல்பு

நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
  மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துழிப் போது செய்து
ஆணைப் பெண்ஐய அணைக்குறு மாறே.
  
உரை