61.

           குரங்கு

நுண்பொருளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
  நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழும் குரங்கும் புரைப.
  
உரை
   


62.

            வண்டு

முருக்கு அலர் போல் சிவந்து ஒள்ளியரேனும்   

 

பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

  
உரை
   



63.

        இதுவும் அது

மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்

 

தக்கது அறிந்தார் தலைமைக் குணம்என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரையாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்று இன்றே.

  
உரை
   



64.

      பண்பு உடைமை

நகைநனி தீது துனி நன்றி யார்க்கும்

 

பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகைமிகு வான் உலகு எய்தி வாழ்பவரே.

  
உரை
   

65.

           நல்குரவு

பெண்டிர் மதியார் பெருங்கிளை தான்அது

 

கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.

  
உரை
   

66.

         இதுவும் அது

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்

 

நல்லவை யாரும் நனிமதிப்பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்என்று போதலை மெய்என்று கொள் நீ.

  
உரை
   

67.

        இதுவும் அது

தொழுமகன் ஆயினும் துற்றுடையானைப்
  பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமியரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.
  
உரை
   

68.

         இதுவும் அது

பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
  அருளி லறனு மமைச்சி லரசு
மிருளினு ளிட்ட விருண்மையிது வென்றே
மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.
  
உரை
   



69.

நல்லாசிரியர் அல்லாதார் அறம் உரைத்தலின் தன்மை

அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும்
    முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்கு அறிவு இல்லான் அஃது அறியாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லுமாறே.
  
உரை
   



70.

          நாட்டு வளம்

பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
  கன்னல்அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம் புதைக்குமே.
  
உரை
   



71.

      பாசாண்டச் சாத்தன்

பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
  தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.
  
உரை
   

72.

   காமுற்று வருந்தும் ஒரு மகள்

அன்றை பகல் கழிந்தாள்இன்று இராப்பகற்கு
  அன்றில் குரலும் கறவை மணி கறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரம்பு நரம்பு என ஆர்ப்பவும்.
  
உரை