யாக்கையின் இழிதகைமை
நன்கணம் நாறும்இது என்றுஇவ் உடம்பு நயக்கின்றது ஆயின் ஒன்பது வாயில்கள் தோறும் உள்நின்று அழுக்குச் சொரியத் தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின் இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகையால் கொள்ளலாமே.