இதுவும் அது
மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்குஎழு என்றும் தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின் பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின் ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ!