இதுவும் அது

19.

வேரிக் கமழ்தார் அரசன்
   விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால்
   கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால்
   பொலிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின்
   பயன் என்ன வல்லான்.

உரை