நுகர்வினால் அவா அறுத்தல் கூடாது எனல்
வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும் புகழ்எழ விகற்பிக்கின்ற பொருள் இல்காமத்தை மற்றோர் தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார் அகை அழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ!