தொடக்கம்
இதுவும் அது
6.
அனல்என நினைப்பில் பொத்தி
அகம் தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால்
கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால்
நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே
யாவர் போகாமை வைப்பார்.
உரை