கூற்றுவன் கொடுமை
அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்.