தொடக்கம் |
|
|
|
மனம் தூயோர்க்கே
இன்பம் உள ஆகும் எனல்
|
3. |
வாயுவினை நோக்கிஉள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கிஉள வாழ்க்கை அதுவேபோல் தீயவினை நோக்கும்இயல் சிந்தனையும் இல்லாத தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம். |
|
உரை
|
|
|
|
|
|
மெய்த்தவம்
|
4. |
போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல் கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல் சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல் வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.
| |
உரை
|
|
|
|
|
|
நுகர்வினால் அவா
அறுத்தல் கூடாது எனல்
|
5. |
வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும் புகழ்எழ விகற்பிக்கின்ற பொருள் இல்காமத்தை மற்றோர் தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார் அகை அழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ!
| |
உரை
|
|
|
|
|
|
இதுவும்
அது |
6. |
அனல்என நினைப்பில் பொத்தி அகம் தலைக் கொண்ட காமக் கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார் புனலினைப் புனலினாலே யாவர் போகாமை வைப்பார். |
|
உரை
|
|
|
|
|
|
யாக்கை நிலையாமை
|
7. |
போதர உயிர்த்த ஆவி புக உயிர்க்கின்றதேனும் ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார் ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா காதலால் அழுதும் என்பார் கண்நனி களையல் உற்றார்.
| |
உரை
|
|
|
|
|
|
கூற்றுவன் கொடுமை
|
8. |
அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்.
| |
உரை
|
|
|
|
|
|
இதுவும் அது
|
9. |
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும்இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி நாளும் நாள் சாகின்றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ! | |
உரை
|
|
|
|
|
|
இதுவும் அது
|
10. |
கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றே மீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா நாள்அடி இடுதல் தோன்றும் நம்உயிர் பருகும் கூற்றின் வாளின்வாய்த் தலைவைப்பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!
|
|
உரை
|
|
|
|