பதிகம்

8.

நாடும் மநாடா ளரசுந்நக ருந்ந கர்சூழ்
காடுங் கடவுள் புகனீக்குதல் கார ணம்மாத்
தேடுஞ் சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும்
பாடும் மவடான் பகைகொண்டுபல் கால்வெ ருட்டி.

9.

தான்கண்ட வன்செய் தவந்தன்னைக் கலக்க கில்லா
மான்கொண்ட நோக்கின் னவளாய்மற மாற்றி யபின்
னூன்கொண்ட காட்சி முதலாகவுடைத்த தெல்லாம்
யான்கண்ட வாறே யுரைப்பன்னவை யார்க்கி தனை.