7.
சாங்கிய வாதச் சருக்கம்
|
730.
|
நீலகேசி சமதண்டத்தினின்றும் புறப்பட்டுச்
சென்று அத்தினபுரம் என்னும் நகரத்தை
எய்துதல்
ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்து ளோங்க வொருகொடி
நட்டுரைக் கிற்பவ னாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச் சாங்கியன் றன்னைத்
தலைப்பெயச் சென்றாள்.
நீலகேசி அந்தச்
சாங்கியனைக் காண்டல் |
731. |
சென்ற ளவன்றன் சிரத்தையைக் கண்டோத நின்றா ளவன்றா
னெறிபகர் கின்றனன் பின்றான் பிரளையத் தாக்கமும் பேர்ச்சியு மொன்றா வகையா
லுரைகளை யொட்டா.
சாங்கியன் தத்துவமுரைத்தல் |
732. |
பாலொத்து நின்ற பரமாத் துமனொடு மூலப் பகுதியு மல்லாப்
பகுதியு மேலொத் தியன்ற விதிவிகற் போடு நூலிற் கிடந்தவ நுண்பொரு
ளன்றே.
நீலகேசி அச்சாங்கியனை
வினவுதல் |
733. |
ஒருங்கிருந் தார்கட் குடனைவ யெல்லாம் பருங்கினன்
மெய்யும் பராசரன் றன்னை விரும்பினள் போல வினவின ளன்றே யருங்கல மாய
வறிவினுள் மிக்காள்.
இதுவுமது |
734. |
என்னைப் பயந்தீரிஃ தென்னெனக் கேட்டன ணன்னுத லாயிது
வென்னெறி யென்றன னன்னனஃ தாயி னறிவி யெனச்சொல வின்னன கேளென் றெடுத்தனன்
சொல்லும்.
பராசரன்
கூற்று
|
735. |
மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக் கென்னவு
மிந்திய மைந்தைந் தொருமன மன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும் பன்னிய
வையைம் பதப்பொரு ளென்றான்.
இதுவுமது |
736. |
எத்திறத் தின்னுஞ்செய் யான்குண மொன்றிலன் றத்துவ
னின்பன பேதன லேபக னித்திய னெங்கு முளனெடுங் காட்சியன் றுத்த லுடையனென்
றோன்றலு மென்றான்.
ஏனைப்
பொருணிகழ்வு |
737. |
நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக் கொன்று
கிரிகையின் றப்பியத் தம்மது சென்று செய் மானிற் செருக்கத்தி
னீரெட்டு மன்றியு மைவகைப் பூதமு
மன்றே.
நீலகேசி பராசரன்
கூற்றை மறுத்துரைத்தல் |
738. |
ஐயைம் பொருளு மிவையிவை யல்லது தையன் மடவர றத்துவ
மில்லென மைய லுடையவர்க் காமற்றை யார்க்கிவை பொய்யென் றுரைத்தனள்
போதரிக் கண்ணாள்.
பராசரன் சினந்து நீலகேசியை
நோக்கிக்கூறல் |
739. |
கதக்களி யானைமுன் கல்லெறிந் தாற்போற் பதப்பொரு
டம்மைப் பழுதென் றுரைப்ப மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி யுதப்பென்னுங்
குற்ற முரையெனக் கென்ன.
நீலகேசி அத் தத்துவங்களுக்குக் குற்றங்
கூறுதல் |
740. |
செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னை வையா யுயிருள
தன்றெனின் வாக்கிவை மெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவை மையா மினிநின்றன்
மார்க்கமு மன்றே.
இதுவுமது |
741. |
எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற் றத்துவஞ்
சொல்லுந் தலைமக னாகிய சித்தியு மில்லாந் திருட்ட விரோதமும் பொய்த்தலுள்
ளிட்டவும் புல்லுமற் றென்ன.
பாராசரன் கூற்று |
742. |
பெருமை யுயிர்க்குரை யேன்செய்கை பின்னும் இருமை யுயிரென
தாமிடை யொன்றுங் கரும வுயிரு மிவற்றினி னன்றே. யருமை யுடைச்செய்கை யாக்கமு
மென்றான்.
நீலகேசி
கூற்று |
743. |
செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிரும் மெய்யி னுளவெனின்
மேற்கோ ளழிதலும் பொய்யும் பொதியறை மையுமற் றல்லவு மெய்து மிதற்கினி
யென்செய்தி யென்றாள்.
நீலகேசி பராசரனை
அசதியாடல் |
744. |
சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பின னோம்பற்
கருமையி னுண்ணுமாற் றாமையி னாம்பின்னைச் செய்ததெ னன்கவ
னின்றியும் போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ.
இதுவுமது |
745. |
ஆண்டரு வாய்த்தொழில் யாதுமில் லாயின் வேண்டின்மெய்
யாதி விகிர்தி விகற்பொடு தீண்டலு மொட்டலுந் தேரினி லாதவன் காண்டற்குந்
துத்தற்குங் காரண மென்னோ.
இதுவுமது |
746. |
முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப் புத்தாத்து
மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ் சித்தாத் துமனாய்த் திரிவின்றி
நின்ற சுத்தாத் துமனைச் சுழற்றுவ தென்றாள்.
இதுவுமது |
747. |
பரமாத் துமனைப் பளிங்கடை போல வருமாத்து மாக்களின்
மன்னும் விகாரம் தருமாத் திரையன்றித் தக்கதொன் றாக வொருமாத் துமனை
யுரைத்திடு கென்றாள்.
இதுவுமது |
748. |
செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்று சொல்லு
மெனினுமுன் சொல்லிய தாமெய்தும் பல்லுநுன் னாவும் பதையா துரையன்றி யெல்லுந்
துணையு மிருவினை யென்றே.
இதுவுமது |
749. |
யானென தென்னுஞ் செருக்கினை யீன்பது மானெனப் பட்டது
மன்னுமோர் சேதனை தானினை யாக்குத றக்கின்ற சேதனை மேனினைத் தானுரைத் தானல்ல
னென்றாள்.
இதுவுமது |
750. |
மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித் தான்றான்
பிறிதோர் பொருளோ விரண்டொடு மூன்றாவ தொன்றினி யின்றா
விருந்தவிச் சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள்.
இதுவுமது |
751. |
முதற்பொரு ளேயாங் குணமது வாகின் அதற்பிறி தென்னி
னதுமனனு முண்டா லிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள். சுதப்பொருண் மேனன்றுஞ்
சொல்லுதல் வல்லாள்.
இதுவுமது |
752. |
அருவாய காரண மாயவ் வியத்த முருவா மறுதலை யொப்பிக்கு
மென்பாய் மருவாத சொல்லினை மாதிரந் தானே பருவாய்ப் பதக படைத்திடு
மென்னாய்.
இதுவுமது |
753. |
பகைக்குண மாகிய பகுதி விகுதி மிகைக்குணந் தோன்றுநின்
மேற்கோ ளழித்துத் தொகைக்கணம் யாவையுஞ் சூனிய மாமா னகைக்குண மல்லது நம்பலை
யென்றாள்.
இதுவுமது |
754. |
புத்தேந் திரியமுங் கம்மேந் திரியமும் பத்தேந்
திரியத்தோ டொன்றாய்ப் படைத்தனை பித்தேந் திரியமும் பேயேந்
திரியமும் குத்தேந் திரியமுங் கொண்டிலை யன்றே.
இதுவுமது |
755. |
தந்திர மாவன தாமிடைத் தோன்றுவ வந்தர வாத்தும
னைந்தனெ வேண்டினை சிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனி னிந்திரன் றானு
மிணைநுனக் காமோ.
இதுவுமது |
756. |
கைகளுங் காலு மிருசா ரிடக்கரு மெய்திய வாக்குமற்
றிந்திய மாமெனிற் செய்யும் புலனு மறியு மறிவுமற் றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை
யென்றாள்.
இதுவுமது |
757. |
காட்டிய வாறுங் கருமத்தி னாமெனி னூட்டு முலையு முதடும்
புருவமு மாட்டுங் கவுளு மறமெல்லும் பற்களும் கூட்டி மிடறுங் கொளக்குற்ற
மென்னோ.
தன்மாத்திரைகட்கு
மறுப்பு |
758. |
ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர் கந்தங்க
ணாதியிற் காம்புல னேயவை வந்துபெருகி வரிசையி னான்மிகும் புத்தியி னால்வகைப்
பூதமு மென்றாள்.
ஒலி வானத்திற்
பிறவாதென்றல் |
759. |
ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ் சென்றாய்க்
கிடந்த தசேதனை தானென்று மன்றா யருவா யதுவவ்வா காயமு மென்றா ளெழினெடுங்
கண்ணிணை நல்லாள்.
இதுவுமது |
760. |
தானரு வாய பொருளது வாமொலி மேன்மரு வாதுரு வாதலி
னான்மெய்ம்மை நூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள் மான்மரு வாவந்த நோக்கு
மரியாள்.
நீலகேசி ஏனைத்
தத்துவங்களும் பொருந்தா
வெனல் |
761. |
பகுதியின் மானில்லை யிஃதினு மஃதில்லை தொகுதிசெய்
பல்குணந் தோற்றமு மில்லா மிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற் றகுதியின்
றத்தநின் றத்துவ மென்ன.
இதுவுமது |
762. |
குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப் பொருடம
தாக்கமும் போத்தந் துரைப்பிற் றெருட லிலையவர் செய்கையிற் செய்கை யிருடன்னை
யின்றி யிவையெய்து மென்றாள்.
இதுவுமது |
763. |
எவ்வகை யின்னும் விகார மிலாப்பொருட் கிவ்வகை தம்மை
யெடுத்துரை யென்செய்யும் மெய்வகை யாலொப்பின் மேற்கோண் முதலிய வவ்வகை
யெல்லா மழிவுள தாமே.
இதுவுமது |
764. |
கூடியு மாகாக் குணத்தின நீயவட் பாடி யுரைத்த வுயிரும்
பகுதியும் பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை நாடியுங் காணென்று நன்னுத
னக்காள்.
இதுவுமது |
765. |
இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும் புல்லின வேயாற்
புணர்ச்சி புதிதனெச் சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள் பல்லன தாமவை
பண்டு முளவே.
சாங்கியன் கூற்று |
766. |
ஆட லழித்தல் படைத்த லடங்குதல் வீடுபெற் றாங்கண்
விளங்கு நிலைமையுங் கூடிய வைந்து குணத்தின னாதலி னாடிய குற்றங்க ணண்ணல
வென்ன.
நீலகேசி நினது ஏகாத்துமவாதம்
பொருந்தாதனெல் |
767. |
ஓதிய வெல்லா மொருவனி னங்கொரு நீதி வகையா னெறிமைப்
படுதலும் வாதுசெய் வார்கள் பிறராய் வருவது மூதிய மில்லை யொழியென்
றுரைத்தாள்.
இதுவுமது |
768. |
யானை குதிரை முதலாப் படைகுடி யேனைய தாங்களு மெல்லா
மவனெனிற் றானென்று மாள்வது தன்னை யெனினங்கள் கோனிவ னாமெனக் கூறினர்
யாரோ.
இதுவுமது |
769. |
என்னை யொழித்தினி யெல்லா மவனெனச் சொன்ன முறைமைய
னாகு மவனெனிற் றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற் பின்னை யவனையோர்
பித்தனென் னாமோ.
இதுவுமது |
770. |
தன்கையிற் றன்கண்ணைத் தானே பொதக்குத்தி யென்செயக்
குத்தினை யென்பார் பிறரில்லை தன்கையிற் றன்கண்ணைத் தான்பொதக் குத்துவ
தென்செய வோவிதன் காரணஞ் சொல்லாய்.
இதுவுமது |
771. |
தன்னைப் படைப்பின்முன் றானின்மை யாலில்லை பின்னைப்
படைக்கிற் படைக்கப் படுவதின் முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனே நுன்னைப்
படைத்தவர் யாரினி நோக்காய்.
இதுவுமது |
772. |
கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி
னத்தவம் பொன்றுமற் றாதலி னஃதும் பொருத்தமி றின்றுதின் றிட்டுப் படைப்பிற்
றெருட்சிமற் றென்று மிலன்பெரி தேழையு மாமே.
இதுவுமது |
773. |
ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன் றீர்ப்பவ னோயவன்
சீறு மவனுயிர் நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன் பேர்ப்பவ னாயும் பெறுகின்ற
தென்னோ.
இதுவுமது |
774. |
நாயாய்க் கடிக்கு நரியாய்ப் பலகொல்லும் பேயாய்ப்
புடைத்துண்ணும் பெற்றமு மாய்க்குத்து மீயாய் நலியு மெறும்பாய்த்
தெறுமெங்கும் தீயா னொருவனின் றேவனு மென்றாள்.
இதுவுமது |
775. |
வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத் தாடி தவஞ்செயத்
தன்கா லழித்திடப் பாடிய கையிற் படைக்கு மிவனெனின் மூடர்கட் டேற்ற முடிவுமுண்
டாமோ.
நீலகேசி, புடைபெயர்வில்லா நிலைபேறு
பொருந்தாதனெல் |
776. |
நித்திய மாய பொருணின வாதலின் வித்தினு ளுண்டென
வேண்டுதி நீள்பனை யெத்துணை யோவது வென்னினு நுன்கைக்கு ளித்துணை யுண்டென்ப
தென்னைகொ லேழாய்.
இதுவுமது |
777. |
இப்பொழு தில்லை யெதிரதற் குண்டெனி னப்பொழு துண்மையு
மின்மையு மாக்கி னெப்பொரு டாங்களு மின்னன வேயெனச் செப்பினள் தத்துவஞ்
சேயரிக் கண்ணாள்.
தத்துவம் இருபத்தைந்தனெல் பிழை
எனல் |
778. |
உருவோ டருவமா காயமு மூன்று மிருபதின் மேலுமைந் தாக
விசைத்தனை யருவோ டலோக மசேதன மூன்றிற் செருவோ டுரிமையிற் சேர்பவு
மன்றே.
இதுவுமது |
779. |
ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ் சென்றவ
னுண்மை பகுதி யிதுமன்னு மென்றனை யெண்முறை யன்றிமற் றீண்டுபு நின்றன வீறா நிலமுத
னான்கே.
இதுவுமது |
780. |
பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ் சித்தனை யாகக்
கருதியல் சீவன்கட் கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத் துத்தலுங் காண்டலுஞ்
சொல்லினை யன்றோ.
பராசரன் ஆருகதரறங்கோடலும்
நீலகேசி அவனை
மெய்யுணர்வித்தலும். |
781. |
வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக் கொண்டே
னெனவவன் கூறினன் கூறலும் பண்டே லறியெனப் பராசர நீயினிக் கண்டா யெனச்
சொல்லிக் காட்சி கொடுத்தாள்.
நீலகேசி பராசரனை
வாழ்த்துதல் |
782. |
ஐந்து மிருபது மாகிய சொற்பொரு டந்திவை யல்லது தத்துவ
மில்லென்ற சிந்தை யொழித்துச் சினவரன் சேவடி வந்தனை யேசெய்து வாழிநீ
யென்றாள். |