உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
கோபிர்
கைதொழக் கோயில்
போகி வேல்கெழு
முற்றமொடு வீதியி
னீங்கிக்
குஞ்சரச் சேரித் தன்னக ரெய்தி
அன்றை வைகல் சென்ற
பின்னர்
|
|
(அரசன் மக்கள்
படையரங்கேற்றம்) 1 - 4: கோலவர்..........பின்னர்
|
|
(பொழிப்புரை) உதயணகுமரன்
இங்ஙனம் காவலர் கை தொழ அரண்மனையைவிட்டுச் சென்று அதன் வேற்படை
பொருந்திய முற்றத்தையும் வீதியையும் கடந்து குஞ்சரச் சேரிக்கண்ணதாகிய
தனது மாளிகையை அடைந்து அற்றை நாள் கழிந்தபின்னர்
என்க.
|
|
(விளக்கம்) கோயில் -
அரண்மனை, நகர் - மாளிகை.
|