"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக் குடுமி
களைந்தநுதல் வேம்பின் ஒண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு
மிலைந்து குறுந்தொடி கழித்தகை சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவவன்
கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்று மிலனே
பால்விட்டு அழினியும் இன்றயின்றனனே" (புறநா - 77)
எனவரும் பாடல் நினையற்பாலது.
புயலாகிய மாசென்க. மாநிலம் உலவாது தாங்க என மாற்றுக. புணிற்றுநாள்
- பிறந்து அணிமைக்காலம். கன்னி மகளிர் பிறை தொழுதல் மரபு. செக்கர்
- செவ்வானம், தூய்மை - தூய நிலாவொளி. மதர்வை - மயக்கம். ஓர்:
அசை.
|