பக்கம் எண் :

பக்கம் எண்:221

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           புரிந்த சுற்றமொடு புணர்ந்துடன் கெழீஇ
           விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய
           மறுநீங்கு சிறப்பின் மதிலுஞ் சேனை
           நறுநீர் விழவி னாளணி கூறுவென்
 
             (தோற்றுவாய்)
           1 - 4: புரிந்த..........கூறுவென்
 
(பொழிப்புரை) இவ்வாறு குற்றம் நீங்கிய சிறப்பினையும் மதில்களையும் உடைய உஞ்சை நகரத்து மக்கள் தாம் தாம் விரும்பிய சுற்றத்தாரோடு கூடிப் பரந்த நீரையுடைய பொய்கையின்கண் நீர்விளையாட்டை விரும்பிய அந்த நறிய நீர் விழா நாளினது அழகினை இனி யான் கூறுவேன் ; கேண்மின்! என்க.
 
(விளக்கம்) இது நுதலிப்புகுதல் என்னும் உத்தி. நூலாசிரியர் கூற்று. உஞ்சேனை - உஞ்சைநகரம் : ஆகுபெயர்.