உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
எண்ணமொ
டிருந்தோன் கண்ணியது
கருதி யாத்திரைக்
கமைந்தன பாற்பட
வடக்கிப்
போகுபொரு ளுணர்ந்து பாகுசெயற்
கெய்தி நயந்தெரி
நாட்டத்து வயந்தகன் கூறும்
|
|
1 - 4:
எண்ணம்..........கூறும்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு சிந்தனை செய்து கொண்டிருந்த உதயணன் கருதியதனைக்
குறிப்பறிதலின்கண் குறிக்கோளுடன் இருந்த வயந்தகன் நன்குணர்ந்து
வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு செல்லக் கருதிய உதயணன் செலவிற்கு
வேண்டிய பொருள் களைத் தன்பாற் கரந்துவைத்துக்கொண்டு பக்குவமுடைய
செவ்வியிற் செய்யவேண்டிய அச்செயலுக்குத் தானும் உடம்பாடெய்தி உதயணனை
நோக்கிக் கூறாநிற்பன் என்க.
|
|
(விளக்கம்) கண்ணியது - கருதியது. யாத்திரை - வாசவதத்தையைக் கவர்ந்து கொண்டு
செல்லும் செலவு. போகு பொருள் - உதயணன் வாசவதத்தையோடு செல்லக் கருதிய
கருத்தென்க. பாகு - பக்குவம் - காலம் இடம் முதலியவற்றாற் பக்குவப்பட்ட
செயல் என்க. நயம் - ஈண்டுக் குறிப்பறிதல்.
|