உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
50. குறிஞ்சிநிலங் கடந்தது |
|
வல்லவை
யெல்லாம் வில்லோன்
மக்களை விரைந்தன
னாகிய விறல்கெழு
வீரியன் முகைந்த
புறவின் முல்லையம்
பெருந்திணை இகந்த
பின்றை யிருபாற் பக்கமும்
|
|
1 - 3
: விரைந்தனன்..........பக்கமும்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
பிடியானையைச் செலுத்தி விரைந்து சென்றவனாகிய வெற்றிபொருந்திய வீரன்
உதயணமன்னன் யாண்டும் மரஞ்செடி கொடிகள் அரும்பிய கொல்லைகளையுடைய
அம்முல்லை நிலத்தைக் கடந்த பின்னர் இரு பக்கங்களினும்
என்க.
|
|
(விளக்கம்) விறல் - வெற்றி. இகந்த
பின்றை - கடந்த பின்னர். பாற்பக்கம்: இருபெயரொட்டு.
|