பக்கம் எண் :

பக்கம் எண்:555

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           எவ்வ ழியாயினு மெரியவித் தவ்வழிக்
           காண லுறுதுங் காட்டா யாயின்
     110    ஆண முன்கை யடுதும் யாமென
 
          (வேடர் கூற்று)
          108 - 110: எவ்வழி..........என
 
(பொழிப்புரை) பின்னரும் அவ்வேடர் உதயணனை நோக்கி எப்படியாயினும் இந் நெருப்பினை யவித்து அவ்விடத்தே யாங்கள் அப் பொருளைக் காண்டற்கு ஒருப்படுகின்றோம். நெருப்பவித்த பின்னர் நீ அவற்றை எமக்குக் காட்டாயெனின் நினக்குப் பாதுகாவலாகிய நின்னுடைய முன் கைகளை யாங்கள் துணித்து விடுவேம் என்று கூற என்க.
 
(விளக்கம்) ஆணம் - காவல்.