பக்கம் எண் :

பக்கம் எண்:603

உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
           சயந்தியம் பெரும்பதி இயந்தகம் புகுதலின்
           தாமலர் அணிந்த வீதி தோறும்
           பழுக்குலக் கமுகும் விழுக்குல வாழயும்
           கரும்பும் இஞ்சியும் ஒருங்குடன் நிரத்
      5    முத்த் தரியமும் பவழப் பிணயலும்
           ஒத்த தாமம் ஒருங்குடன் பிணஇப்
           பூரணப் பெருங்கடத்தோரண நாட்டி
           அருக்கன் வெவ்வழல் ஆற்றுவ போல
           விரித்த பூங்கொடி வெறுபல நுடங்க
 
         1-9 ; பாலிந்த சும்மயொடு..,..,..விதியிற் கூறுவென்
               ( 1 முதல் 9 வர புலவர் கூற்று,)
 
(பொழிப்புரை) வாசவதத்தையோடு உதயணன் தன் கேளிர்நகரமாகிய சயந்தி என்னும் அழகிய பெரிய நகரத்தின்கண் உறைதலை நெஞ்சாலே ஒருப்பட்டு வந்து, அந் நகரத்தின்கண் புகாநிற்றலின் அந்நகரத்துள்ள மகளிரும் மைந்தரும் பெரிதும் மகிழ்ந்து, மலர் பரப்பி அணிசெய்யபட்ட அந்நகரத்தெருக்கள்தோறும், கமுகு முதலியன நட்டுப் பெருவாயிலிடத்தே முத்தாலியற்றிய மேற்கட்டியினையும், பவழமாலைகளையும் பிறமாலைகளையும் பிணைத்து நாற்றிப் பூரணகும்பம் வைத்துத்தோரணம் நாட்டி ஞாயிற்றின் வெப்பத்தை ஆற்றுவனபோல அசையாநிற்கும் நிறமும் அளவும் வேறு்பட்ட பற்பல கொடிகளை உயர்த்து இங்ஙனம் அந் நகரத்தினை அணிசெய்து என்க.
 
(விளக்கம்) 1, சயந்தி உருமண்ணுவா என்னும் அமைச்சனுடைய நகரங்களில் ஒன்று. அரசன் உறைதற்கு ஏற்ற நகர் என்பார்."அம் பெரும்பதி " என்றார். கேளிர் நகரமாதலின் அதன்கட் புக்குறைதல் தகும் என மனத்தால் ஒருப்பட்டு என்பார், " இயைந்து புகுதலின் " என்றார். புகுதலின் என்றது, அந்நகரத்து மக்கள் மகிழ்ந்து வரவேற்றற்கு ஏதுவாய் நின்றது.
    2. தாது -மகரந்தம், அணிந்த - அணியப்பட்ட..
    3, பழுக்குலை-பழுத்த குலை, விழுக்குலை-சிறந்த குலை.
    4. நிரைத்து - நிரல்பட நட்டு.
    5. உத்தரியம் - மேற்கட்டி - பிணையல் - மாலை.
    6. ஒத்த தாமம்-தம்முள் இணையொத்த மாலை என்க. பிணைஇ-பிணைத்து.
    7. பெருங்கடை-பெருவாயில். பூரணம்-பூரணகும்பம்; நிறைகுடம் தோரணம்-  மாவிலை பனங்குருத்து முதலியவற்றாலியற்றுமொரு மாலை, அம் மாலையினைக் கழிநட்டுக் கட்டுவர் ஆதலின் தோரணம் நாட்டி என்றார்.
    8. அருக்கன்-ஞாயிறு. கொடிகள் விண்முட்ட உயர்ந்து நின்று ஆட உயர்த்தி என்பார், அருக்கன் வெவ்வழல் ஆற்றுவபோல நுடங்க என்றார். நுடங்க-அசையா  நிற்ப. 'இவ்வாறு அந்நகரத்தினை ஒப்பனை செய்து' என்பது இசையெச்சம், 
    மேல், அம் மக்கள் மங்கலப் பொருள் ஏந்திநகரப் பெருவாயிலின்கண் வந்து  குழுமி எதிர்கொள்ளுதல் கூறுகின்றார்.