பக்கம் எண்:605
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 1. நகர் கண்டது | | 15 வெந்துயர் அருவினை
வீட்டிய அண்ணலை இந்திர
வுலகம் எதிர்கொண்
டாங்கு மகளிரும்
மைந்தருந் துகணிலந் துளங்க
நற்பெருங் கடைமுதல் நண்ணுவனர் குழீஇப்
பொற்பெருங் குடத்திற் புதுநீர் விலங்கி
| | 15 - 19 ; வெந்துயர்
அருவினை,,,,,,.,.,,புதுநீர் விலங்கி
| | (பொழிப்புரை) வெவ்விய
பிறவித்துன்பதிற்குக் காரணமான இருவினையையுங் கெடுத்த தலைவனாகிய
அருகக்கடவுளைவானவர் தம்முலகத்தே எதிர்கொண்டாற்போல,மண்திணிந்த நிலம்
நெளியும்படி அழகிய அந்நகரப் பெருவாயிலியே எய்திய புதிய கடவுணீராலே
நிரப்பப்பட்ட பொற்குடம் முதலியவற்றை ஏந்தியவராய்க் கூடி நின்று
எதிர்கொள்ளாநிற்ப என்க.
உதயணன் புகுதலின் அந் நகரமக்கள் நிரைத்துப் பிணைஇ நாட்டி நுடங்க ஒப்பனை
செய்து உரற இயம்ப. அண்ணலை இந்திர உலகம் எதிர்கொள்ளுமாறுபோல
நிறைகுடம் முதலிய எந்திப் பெருவாயிலிற் கூடி எதிர்கொண்டு
என்க,
| | (விளக்கம்) 15. வெந்துயர்
அருவி்னை-வெவ்விய பிறவித் துன்பத்திற்குக் காரணமான கடத்தற்கரிய வினை
என்க.அண்ணல்தலைவன் ; ஈண்டு அருகக்
கடவுள.் 16. இந்திர வுலகம் ; ஆகுபெயர்; வானவர்
என்க, 17, துகள்நிலம்-மண்டிணிந்த நிலம், நிலத்தின்கண்
துகள் எழுந்து இயங்கும்படி குழீஇ எனினுமாம். 18.
நண்ணுவனர்; முற்றெச்சம். நண்ணி என்க. குழீஇ - கூடி, 19,
புதுநீர்-புதுவதாகக் கொணர்ந்த தீர்த்தநீர். விலங்கி - குறுக்கிட்டு;
புதுநீரோடு வந்து எதிர்கொணடென வருவித்துமுடிக்க. மேலே, அம்மகளிரும்
மைந்தரும் உதயணனையும் வாசவதத்தையையும் புகழ்ந்து வரவேற்றல்
கூறுகின்றார்.
|
|
|