| பக்கம் எண்:619
|
|
| உரை | | | | 2. இலாவாண காண்டம் | | | | 2, கடிக்கம்பலை | | | புணர்ப்பியல் காட்சியன் புரையோர் புகழ
நிழற்பெருங் குடையு நேரா
சனமும் செருப்பொடு
புகுதலஞ் சேனை யெழுச்சியும் 20
யானையுந் தானையும் ஏனைய பிறவும்
மண்ணகக் கிழவர் மனக்கோள்
அறாது விண்ணகக்
கிழவனின் விழுப்பங் கூரித்
தம்மிற் பெற்ற தவம்புரி
தருக்கத்
தரும்பரி சாரத்துப் பெருங்கணி வகுத்த
| | | | 17
- 24; புரையோர் புகழ...,.பெருங்கணி வகுத்த
| | | | (பொழிப்புரை) உயர்ந்தோர் புகழும்படி
குடை முதலிய சிறப்புக்களை உடையவனும், தன் அரசர் இந்திரன்போன்று
தம்மனத்தேகொண்ட கொள்கை நிறைவேறிச் சிறப்புறும்படி செய்பவனும், அரசர்
தம்மிற்றாமே நோற்றுப்பெற்ற தவப்பயன் போல்பவனும், சொற்போரில்
வெல்லுதற்கரிய தன்மையுடையவனும், அரசன் பணியாளனும் ஆகிய பெரிய கணிவனாலே
கூறப்பட்ட என்க.
| | | (விளக்கம்) 17.
புரையோர்-உயர்ந்தோர். 18 - 20. குடை ஆசனம் செருப்போடு
புகுதல் சேனையொடு எழுதல் யானை தானை உடையனாதல் என்னும் சிறப்புக்களையுடைய
கணி என்க. 21. மண்ணகக்கிழார்-அரசர். மனக்கோள்-
கருத்து. 22. விண்ணகக்கிழவன் - இந்திரன், நிலவுலகத்து
வேந்தர்தம் கருத்து நிறைவேறுதலானே, இந்திரன் போன்று சிறப்புறும்படி
செய்யும் கணி என்க. 23. அரசர் தம்மில் தாமே நோற்றுப்
பெற்ற தவம் அனையான் என்க. என்றது செயலையும் காலத்தையும் கூட்டி
நற்பயனைத் தவிராது சேர்த்தலிற்றவம் போன்றவன் என்றவாறு. உவமச்சொல்
வருவித்துக் கூறப்பட்,டது. 23-24. புரி தருக்கத்து அரும்
பரிசாரத்துக் கணி- நிகழ்த்தா நின்ற சொற்போரின்கட் பிற கணிகளாலே
வெல்லுதற் கரிய கணி, பரிசாரத்துக் கணி எனத் தனித்தனி கூட்டுக. அரசவைக்
கணிவன் ஆகலின் தருக்க வன்மை கூறல் வேண்டிற்று, பரிசாரம் -
பணித்தொழில். பெருங்கணி - சிறப்புடைய கணிவன். 25. முதல்
55. வரையில், திருமணச் செய்தியை முரசறைந்து அறிவிக்கும் வள்ளுவன்
தன்மையும், செயலும் கூறப்படும்.
|
|
|