பக்கம் எண்:626
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | வாயில் தோறும் வலத்தும்
இடத்தும் நாயில்
மாடத்துத் தாள்முதல் எல்லையுள்
சதிரத் திண்ணைத் தண்பூம்
பந்தருள் 70 பழுக்காய்க் குலையும்
பழங்காய்த் துணரும்
களிக்காய்க் பறியும் துவர்க்காய்
உம்பலும் பளிக்காய்க்
குப்பையும் பலம்பெய் பேழையும்
தளிரிலை வட்டியொடு தாதுபல
அமைத்துச சுண்ணப்
பெருங்குடம் பண்ணமைத்
திரீஇ 75 எண்ணா
தீயுநர் இன்மொழிக் கம்பலும்
| | 67 - 75; வலத்தும்
இடத்தும்,,,,,,இன்மொழிக் கம்பலும்
| | (பொழிப்புரை) வலப்பக்கத்தும் இடப்படக்கத்தும் உள்ள ஞாயில்மாடத்து அடியின்கண் அமைந்த
சதுரமான திண்ணையிடத்தில் அமைக்கபபட்ட குளிர்ந்த அழகிய பந்தரின்கண்
பழுக்காய்க்குலை முதலியவற்றை அமைத்துப் பண்ணமைத்த கண்ணக் குடங்களையும்
வைத்துத் தமர் பிறர் என்று எண்ணாது யாவர்க்கும் வழங்குவோருடைய முகமன்
மொழிகளாலே எழுந்த ஆரவாரமும் என்க.
| | (விளக்கம்) 67.
நாயில் - ஞாயில், ஞாயில் மாடம் - மதிலகத்தோர் உறுப்பு,
68, தாயில் - மாடம் என்றும் பாடம், இதற்குத் தாய்மனையிடத்து மாடம்
என்க. தாள் முதல் எல்லை - அடியின் கண். 69, சதிரம்-
சதுரம் -சமநாற்கோணம். 70, பழுக்காய் - முதிர்ந்தகாய்
பழம் காய்த்துணரும் பழத்துணரும் என்க. துணர்.- கொத்து.
71. களிக்காய் - களிப்பாக்கு. பறி - ஓலையான்
முடைந்ததொரு. பெட்டி துவர்க்காய் - பாக்கு; துவர்ப்புடைய பிற
காய்களுமாம். உம்பல்-ஒரு வகை ஓலைப் பெட்டி. இதனை இக்காலத்தார் உமல்
என்று வழங்கவர.் 72, மளிக்காய் பச்சைக் கருப்பூரம்.
பளிங்குக்காய் - பளிக்காய் என மருவிற்று, பலம்-பழம், தளிர் இலை -
கொழுந்து வெற்றிலை. வட்டி -தாளம் (தாம்பாளம்). . தாது - மணப்பொடி
74. சுண்ணம் - சுண்ணாம்பு. பண்ணமைத்து - மணம் நிற முதலிய
ஊட்டிப் பண்படுத்தி. இரீஇ - வைத்து. 75.
எண்ணாது - தமர் பிறர் என்று கருதாமல் என்க. இன்மொழி - வருவோரை
வரவேற்கும் முகமண் மொழி,
|
|
|